இளைஞர்களை தொழில் முனைவோராக்குதல் திட்டம், கடந்த 2021 - 2022 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு
வருகிறது. நடப்பு 2024-25-ம் ஆண்டில் இளநிலை பட்டபடிப்பு படித்த 100 இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில்
துவங்க ஏதுவாக ரூ. 1.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு 2024-25-ம் ஆண்டில், அதிகபட்ச நிதியுதவியாக ரூ. 1 இலட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக பிரதம
மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME) / வேளாண்மை
உள்கட்டமைப்பு நிதி (AIF) அனுமதிக்கக் கூடிய வேளாண் சார்ந்த தொழில் துவங்கும் பயனாளிகளுக்கு மட்டுமே
வழங்கப்படும்.
நடப்பு 2024-25 ஆம் ஆண்டில் வங்கி கடன் உதவி அல்லாத பிற தொழில் துவங்க அனுமதி இல்லை.
வேளாண்மைதுறை பயனாளிகளை தேர்வு செய்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விற்பனை
துறையிடம் ஒப்படைக்கும். துறை வேளா 4. சிறு, குறு மற்றும் நடுத்தர மற்றும் நடுத்தர தொழில்
நிறுவனங்கள் துறை/வேளாண்மை விற்பனைத்துறையின் வழிகாட்டுதல்படி. பயனாளிகள் விரிவான திட்ட அறிக்கை
தயார் செய்யவும் வங்கிகளிடம் கடன் பெற்று, பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை
முறைப்படுத்தும் திட்டம் (PMFME) / வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் (AIF) ஆகிய திட்டங்களில்
நிதியுதவி பெறவும் வழிவகை செய்யப்படும்.
நடப்பு 2024-25 ஆம் ஆண்டில், தகுதியான பயனாளிகளுக்கான நிதி உதவியானது வேளாண் சார்ந்த தொழில்
துவங்கப்பட்ட
பிறகு பின்னேற்பு மானியமாக விடுவிக்கப்படும்.
Making Youth into Agri-Entrepreneurs
The Scheme "Making Youth into Agri - Entrepreneurs" is being implemented since 2021-22. In the year
2024-25 and Rs.1.00
Crore has been allocated for extending financial Assistance to 100 graduates for establishing
Agri-related Business.
1. During the year 2024-25, financial Assistance to a maximum of Rs.1 lakh as back ended subsidy will be
extended to the
eligible beneficiaries only if the selected candidates take up Projects under
a) Pradhan Mantri Formalization of Micro Food Processing Enterprises Scheme (PMFME) /
b) Agriculture Infrastructure Fund Scheme (AIF)
2. Non-Bankable Projects are not allowed in 2024-25
3. Agriculture department will select the candidates and hand over to MSME/Marketing Department.
4. MSME/Marketing Department will guide and help the beneficiaries to prepare DPR, avail Bank loan and
assistance under
PMFME or AIF as desired by the candidate.
5. For the current year 2024-25, the financial assistance to the eligible beneficiaries will be released
as back ended
subsidy after establishment of Agri-related Business.