Agrisnet

department of Agriculture and Farmers Welfare

Government of Tamilnadu

அக்ரிஸ்நெட்

வேளாண்மை - உழவர் நலத்துறை

தமிழ்நாடு அரசு

Pest & Ctrl message List All Crops

S.No Crop Pest Name Tamil Control Message
1Paddy
Stem Borer
தண்டுத் துளைப்பான்
உயிரியல் முறை ட்ரைக்கோகிராம்மா ஜபோனிகம்,, முட்டை ஒட்டுண்ணி, @ 1,00,000/ha ,வெளிஇடுதல் பேசிலஸ் துரிங்ஜென்சிஸ் வர். குர்ஸ்டாக்கி 1.50 kg/ha . பூச்சிக்கொல்லி பரிந்துரை : (எக்டருக்கு) ஏதேனும் ஒன்று கார்போசல்பான் 6% குருணை --- 16.700 கிலோகிராம் அசிபேட் 75% எஸ்.பி 670-1000 கிராம் , பிப்ரோநில் 5 சத எஸ் சி 1௦௦௦ - 15௦௦ கிராம் 500 லிட்டர் தண்ணீர்கலந்து தெளிக்கவும் ..
2Paddy
Gall Midge
ஆனைக் கொம்பன்
தழைசத்து உரம் (யூரியா) அதிகம் இடக்கூடாது. கீழ் குறிப்பிட்டுள்ள பயிர்பாதுகாப்பு மருந்து 1. கார்போசல்பான் 6% குருனை 16.700 கிலோ கிராம். (அல்லது) 2. பிப்ரோனில் 5% எஸ்.சி 1 லிட்டர். (அல்லது ) 3. குளோர்பைரிபோஸ் 20% இசி 1250 மில்லி 4. குயினல்போஸ் 5% ஜி 5 கிலோ பயிர் நன்கு நனையும் படி தெளிக்கவும்.
3Paddy
Swarming Caterpillar
திரள் கம்பளிப்பூச்சி:
திரள் கம்பளிப்பூச்சி: 1.. நாற்றங்காலில் தண்ணீர் அதிகம் பாய்ச்சி புழுக்களை பறவைகளுக்கு உணவாக்குதல் . 2. புழுக்களை மூச்சுத் திணறச் செய்து கொல்ல பாசனத்தின் போது மண்ணெண்ணெய் 2 லிட்டர் ஒரு எக்டருக்கு நீரில் கலத்தல் மற்றும் நீளமான கயிறு கொண்டு பயிர் மீது இழுத்து விட்டு பயிர் மீதுள்ள புழுக்களை விழ செய்தல் 3. வாத்துகளை வயலுக்குள் விடுதல் . இரசாயனமுறை குளோரிபயிரிபாஸ் 25 EC எக்டருக்கு 2.5 லிட்டர் 500 லிட்டர் தண்ணீரில் கொண்டு தெளிதல்
4Paddy
Rice Skipper
நெல் ஸ்கிப்பர்
வயலில் நீரை வடிய செய்துவிட்டு, பின் மாலை வேலைகளில் குளோர்பைரிபாஸ் 20 இ.சி. ஒரு எக்டருக்கு 1250 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்
5Paddy
Leaf folder
இலை சுருட்டுப்புழு
ட்ரைக்கோகிராம்மா கைலோனிஸை மூன்று முறை வெளியிடுங்கள் (வாரம் ஒரு முறை நடவு செய்த 30 நாள் இடைவெளி) 1,00,000 / எக்டர் பேசிலஸ் துரிங்ஜென்சிஸ் வர். குர்ஸ்டாக்கி எக்டருக்கு 1.50 கிலோ தெளிக்கவும் பின்வரும் பூச்சிக்கொல்லி அசிபேட் 75% எஸ்.பி 666-1000 மிலி, தியாமெதோக்ஸாம் 25% WG 100 கிராம் , ஃபைப்ரோனில் 80% WG 50-62.5 கிராம் தெளிக்கவும்
6Paddy
Green horned caterpillar
கொம்புப்புழு
வயலில் நீரை வடிய செய்துவிட்டு, பின் மாலை வேலைகளில் குளோர்பைரிபாஸ் 20 இ.சி. ஒரு எக்டருக்கு 1250 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்
7Paddy
Yellow hairy caterpillar
கம்பளிப்புழு
வயலில் நீரை வடிய செய்துவிட்டு, பின் மாலை வேலைகளில் குளோர்பைரிபாஸ் 20 இ.சி. ஒரு எக்டருக்கு 1250 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்
8Paddy
Grasshopper
வெட்டுக்கிளி
வயலில் நீரை வடிய செய்துவிட்டு, பின் மாலை வேலைகளில் குளோர்பைரிபாஸ் 20 இ.சி. ஒரு எக்டருக்கு 1250 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்
9Paddy
Spiny beetle
ஹிஸ்பா வண்டு
குளோரோபைரிபாஸ் 20% EC 1250 மி.லி/ஹெக்டேர் கார்போபுரான் 3% சிஜி 25 கிலோ தெளிக்க வேண்டும்
10Paddy
Whorl maggot
குருத்து ஈ
பரிந்துரைக்கப்பட்ட சாம்பல் சத்து உரத்தை பயன்படுத்தவேண்டும். வயலில் நீரை வடிய செய்துவிட்டு, பின் மாலை வேலைகளில் குளோர்பைரிபாஸ் 20 இ.சி. ஒரு எக்டருக்கு 1250 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்
11Paddy
Green Leaf Hopper
பச்சைத் தத்துப்பூச்சி
பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை இரண்டு முறை தெளிக்கவும், 15
மற்றும் நடவு செய்த 30 நாட்களுக்குப் பிறகு: ஒரு எக்டருக்கு
பாஸ்பாமிடான் 40% எஸ்.எல் 1000 மில்லி
கார்போபுரான் 3% சிஜி 25 கிலோ
புப்ரோஃபெசின் 25% எஸ்சி 800 கிராம்
கார்போசல்பன் 25% EC 800-1000
12Paddy
Brown plant hopper
புகையான்
வேப்பெண்ணை 3 சதவிகிதம், 15 லிட்டர்/ஹெக்டேர்் (அ) இலுப்பை எண்ணை 6 சதவிகிதம் 30 லிட்டர்/எக்டர் (அ) வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிகிதம் 25 கிலோ/ஹெக்டேர்
13Paddy
White backed hopper
வெள்ளை தத்துப் பூச்சி
பாஸ்போபிடான் 40 எஸ்.எல் 1000 மி.லி / ஹெக்
14Paddy
Ear Head Bug
கதிர் நாவாய்ப்பூச்சி
பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்,

(எக்டருக்கு):
குயினல்போஸ் 1.5% டி 25 கிலோ
மாலதியோன் 50% EC 500 மில்லி
வேம்பு விதை கரைசல் சாறு 5% (25 கிலோ விதை / எக்டர்)
15Paddy
Thrips
இலைப்பேன்
பாஸ்போமிடான் 40 SL 600 மி.லி/ஹெக்டேர்
16Paddy
Mealy bug
மாவுப்பூச்சி
பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கெள்ளியை தெளிக்கவும். பியுப்ருனின் 25 SC 200 மி.லி/200 லி தண்ணீர் கலந்து தெளிக்கவும். தையோமீத்தாகசம் 20 WDG 100கி/ 200லி தண்ணீரில் கலந்து வெளிக்கவும். டைமீத்தோயேட் 30 EC 400 மி.லி +அசார்டியாக்னெ் 1000 PPM தெளிக்கவும்
17Paddy
Narrow brown leaf spot
குறுகலான செம் புள்ளி நோய்
ப்ரோபிகோணசோல் 25 % sc @ 2 .5 மில்லி / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
18Paddy
zinc deficiency
ஜின்க் பற்றாக்குறை
Zn செலேட்டுகள் (எ.கா., Zn - EDTA) பயன்படுத்தப்படலாம். 2-3 முதல் 10-14 நாட்கள் இடைவெளியில் மீண்டும் தெளிக்கலாம்
19Paddy
Case worm
கூண்டு புழு
ஒரு ஏக்கருக்கு 6 லிட்டர் மண்ணெண்ணெய் பயன்படுத்தி கட்டுபடுத்தலாம். புழுக்களை கீழே விழச் செய்ய, இளம்பயிர்களின் குறுக்கே கயிரைப் போட்டு இழுத்தால் கூடுகள் நீரில் விழும். பின் வயலிலுள்ள நீரை வடிய செய்யலாம் அல்லது வயலின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு நாற்றின் மீது படும்படி கயிரைக் கொண்டு இழுத்தால் முட்டைகளும் கீழே விழுந்துவிடும். ஏதேனும் ஒன்றை தெளிக்கவும், ஃபென்டோயேட் 50% ஈசி 1000 மில்லி தெளிக்கவும்
20Paddy
brown spot
செம்புள்ளி நோய்
சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் 10 கிராம்/கிலோ விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து 2.5 கிலோ /எக்டர் என்ற அளவில் 100 லிட்டர் நீருடன் கலந்து 30 நிமிடங்கள் நாற்றுக்களை நனைத்து பின் நட வேண்டும் அல்லது கேப்டன் அல்லது திரம் @ 2.0 கிராம்/கிலோ விதை நேர்த்தி செய்தல்வேண்டும் அல்லது 2.5 கிராம் அக்ரோசன் அல்லது செரசன்/கிலோ விதை கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஏதேனும் ஒன்றை தெளிக்கவும், கார்பென்டாசிம் 5% ஜிஆர் @ 12.5 கிலோ / எக்டர்
21Paddy
case worm
கூண்டுப் புழு
ஒரு ஏக்கருக்கு ஆறு லிட்டர் என்ற அளவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தி கூண்டுப்புழுக்களை கட்டுபடுத்தலாம். துார்களிலிருக்கும் புழுக்களை கீழே விழச் செய்ய, இளம்பயிர்களின் குறுக்கே கயிரைப் போட்டு இழுத்தால் கூடுகள் நீரில் விழும். பின் வயலிலுள்ள நீரை வடிய செய்யலாம் அல்லது வயலின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு நாற்றின் மீது படும்படி கயிரைக் கொண்டு இழுத்தால் முட்டைகளும் கீழே விழுந்துவிடும். மிதைல் பாரத்தியான் 0.05% (அ) குயினைல்பாஸ் 0.05% தெளிக்க வேண்டும்.
22Ragi
Pink stem borer
இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான்
டை மெத்தோடே 30%EC அல்லது குயினால்போஸ் 25% EC 1500 மி.லி /ஹக்ட்டர் தெளிக்கவும் .ஹெக்்டருக்கு பாசலோன் 35 % EC மருந்தை 20 நாட்கள் இடைவெளியில் தெளித்த இளஞ்சிகப்பு தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்• முட்டை ஒட்டுண்ணி ட்ரைக்கோகிராம்மா சிலோனிஸ் @ 12 சி.சி / எக்டர் பயன்படுத்தவும்.
23Ragi
Ear Head Bug
கதிர்நாவாய் பூச்சி
கார்பரில் 50 WP @ 1 கிலோவை 500 லிட்டர் தண்ணீர்/ஹெக்டேர் மருந்தை பால் பருவத்தில்தெளிக்க வேண்டும்.
24Ragi
Aphid
அசுவினி
பூச்சி தாக்கிய செடியின் கீழ்பகுதியில் டெமட்டான் 25 EC 20 மி.லி பூச்சி மருந்தினை தெளிக்கலாம.அல்லது டைம்தோயேட் 30EC 1.2 லிட்டர் / எக்டர் தெளிக்கவும்.
25Ragi
Shoot fly
குருத்து ஈ
மிட்டோகுளோரோபிட் மருந்தினால் பூசப்பட்ட விதைகளை பயன்படுத்தவேண்டும் டை மெதொட்டே 30%EC 1155 ml/ha, கார்இபோபுரான் 3 சிஜி 33.3/ha கிலோ தெளிக்கவும்
26Cholam
Shoot fly
குருத்து ஈ
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் இமிடாகுளோபிரிட் 70 ws என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். டைமெத்தோட் 30 EC 12 ML /ஹ என்ற மருந்தினை தெளிக்கவும்
27Cholam
Stem Borer
தண்டுத்துளைப்பான்
கார்போபியுரான் 3G 17 கிலோ/ஹெக்டேர் பூச்சிக்கொல்லியை மணலுடன் (50 கிலோ) கலந்து இலைகளின் மீது தூவ வேண்டும்
28Cholam
Pink stem borer
இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான்
ஹெக்்டருக்கு பாசலோன் 35 % EC மருந்தை 20 நாட்கள் இடைவெளியில் தெளித்த இளஞ்சிகப்பு தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்்
29Cholam
Ear Head Bug
கதிர்நாவாய் பூச்சி
கதிர் உருவாகிய 3 வது மற்றும் 18 நாட்கள் கழித்து கார்பரில் 10 D 25 கிலோ/ ஹெக்டேர் மருந்தினைத் தெளிக்கவும்
30Cholam
Ear Head Caterpillar
கதிர் துளைபான்
ஒரு ஹெக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் இனக்கவர்ச்சி பொறிகளை அமைத்து ஆண் அந்துப் பூச்சிகளை கவர்ந்திழுத்து அழிக்கலாம்
31Cholam
Shoot bug
குருத்துப்பூச்சி
டைமீத்தேயேட் 0.02 சதம் மருந்தை ஹெக்டருக்கு 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
32Cholam
Shoot fly
குருத்து ஈ
`டைமெத்தோட் 30 EC 12 ML /ஹ என்ற மருந்தினை தெளிக்கவும்
33Maize
Pink stem borer
இளஞ்சிகப்பு தண்டுதுளைப்பான்
ஹெக்்டருக்கு பாசலோன் 35 % EC மருந்தை 20 நாட்கள் இடைவெளியில் தெளித்த இளஞ்சிகப்பு தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்• முட்டை ஒட்டுண்ணி, ட்ரைக்கோகிராம்மா சிலோனிஸ் @ 12 சி.சி / எக்டர் முட்டை ஒட்டுண்ணி பயன்படுத்தவும்.
34Maize
Ear Head Bug
கதிர் நாவாய் பூச்சி
கீழ்காணும் ஏதாவது ஒரு மருந்தினை கதிர் வரும் தருவாயில் மூன்றாவது மற்றும் பதினெட்டாவது நாளில் தெளிக்கவும்
மாலத்தியான் 5 D 25 கிலோ/ஹெக்டேர்
வேப்பம் கொட்டை வடிநீர் 5 சதவீதம்
அசடிராக்டின் 1 சதவீதம்
35Maize
Aphid
அசுவினி
பூச்சி தாக்கிய செடியின் கீழ்பகுதியில் டெமட்டான் 25 EC 20 மி.லி பூச்சி மருந்தினை தெளிக்கலாம.அல்லது டைம்தோயேட் 30EC 1.2 லிட்டர் / எக்டர் தெளிக்கவும்.
36Maize
shoot fly
குருத்து ஈ
மிட்டோகுளோரோபிட் மருந்தினால் பூசப்பட்ட விதைகளை பயன்படுத்தவேண்டும் டை மெதொட்டே 30%EC 1155 ml/ha தெளிக்கவும்
37Maize
Ash weevil
சாம்பல் வண்டு
குயினால்பாஸ் 25 இ.சி 1 லி/ஹெக்டேர் என்ற மருந்தினை தெளிக்கவும்
38Maize
Shoot bug
குருத்து பூச்சி
டைமிதோயேட் 0.02 சதவிகிதம்பூச்சி மருந்தினு தெளிக்கவும்
39Maize
Stem borer
தண்டுத்துளைப்பான்
அவரை அல்லது தட்டைப்பயிரை 4:1 என்ற விகிதத்தில் சோளத்துடன் ஊடுபயிராக செய்வதன் மூலம் இப்பூச்சியின் தாக்குதலை சிறிதளவு குறைக்கலாம்
விளக்கு பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்
குருத்துக் காய்ந்த செடிகளை வயலிலிருந்து அகற்றிவிடவேண்டும்
40Maize
Corn worm/Earworm
கதிர் துளைப்பான்
விளக்கு பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம் இனக்கவர்ச்சி பொறி 12/ஹெக்டேர் என்ற எண்ணிக்கையில் அமைத்து ஆண் அந்துப்பூச்சியின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் பசலோன் 4டி 25 கிலோ /ஹக்ட்டர் வயலில் இடவும்
41Maize
Leafhopper
தத்துப்பூச்சி
விளக்குப் பொறி அமைத்து தத்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்
நட்ட 150 மற்றும் 210 நாட்கள் கழித்து தோகை உரிப்பதன் மூலம் குஞ்சுகளையும் முட்டைகுவியலையும் அழிக்கலாம்
பிப்ரோனில் 5%SC 1000-1500கி /ஹ தெளிக்கவும்
42Maize
Fall Army Worm
படை புழு
சின்ன புழு பருவம் - அசரடிடாக்ட்டின் 1 % EC ml /10 லிட்டர் தெளிக்கவும் . விதைத்த 40 - 45 பின் மெட்டாரைசியும் அனிசோபிளே 80 கிராம் /10 லிட்டர் தெளிக்கவும் . அல்லது விதைத்த 60 - 65 பின் குளோரோட்ரானிலிப்ரோல் 2 ml /லிட்டர் தெளிக்கவும் . அல்லது • ஃப்ளூபெண்டியாமைடு 480 எஸ்சி 4 மிலி / லிட்டர் தெளிக்கவும் .
43Maize
american bool warm
அமெரிக்கன் படை புழு
விதைப்பு செய்த 15 முதல் 20 நாள் பயிருக்கு ஆசிடிராக் டின் 1500 பிபிஎம் 1ஏக்கருக்கு - 1 லிட்டர் என்ற வீதம் நீரில் கலந்து தெளிக்கவும் இளம் குருத்துப்பருவம் (விதைப்பு செய்த 15 முதல் 20 நாட்கள்)  அசாடிராக்டின் 1500 ppm – ஏக்கர் ஒன்றுக்கு 1 லிட்டர் வீதம் நீரில் கலந்து தெளிக்கவும் குருத்துப்பருவம் (விதைப்பு செய்த 40 முதல் 45 நாட்கள்)  மெட்டாரைசியம் அனிசோபிலே – ஏக்கர் ஒன்றுக்கு 1.6 கிலோ வீதம்
44Cumbu
Shoot fly
குருத்து ஈ
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் இமிடாகுளோபிரிட் 70 ws என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். டைமெத்தோட் 30 EC 12 ML /ஹ என்ற மருந்தினை தெளிக்கவும்
45Cumbu
Stem borer
தண்டு துளைப்பான்
அறுவடை செய்த உடனே மக்காச்சோளத் தட்டைகளையும் சேர்த்து நிலத்தை உழவு செய்வதன் மூலம் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்,விளக்குப்பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம் கீழ்காணும் மருந்தினை மணலுடன் (50 கிலோ) கலந்து வீசவும் கார்போபியூரான் 3 G 17 கிலோ
46Cumbu
helicoverpa
தலைத் துளைப்பான்
1. ஊடு பயிராக பச்சைப் பயிறு, உளுந்து, கடலை, சோயாபீன் பயிரிடலாம். 2.விளக்குப்பொறி (1 விளக்குப் பொறி / 5 ஏக்கர்) என்ற அளவில் வைக்கலாம் 3.ஹெச். என். பி.வி 250 எல்.இ. + 1 கிலோ கரும்பு சர்க்கரை + 200 மி.லி. சேண்டோவிட் (அ) பீபால் கலந்து மாலை வேளைகளில் மட்டும் தெளிக்கலாம் 4.5% வேப்ப எண்ணெய் (அ) 5% வேப்பங்கொட்டை சாறு முட்டை இடுவதற்கு முன் தெளிக்கவும்
47Redgram
Gram pod borer
பச்சை காய்த் துளைப்பான்
இனக்கவர்ச்சிப் பொறிகள் எக்டருக்கு 12 வைத்துக் கட்டுபடுத்தலாம் பேசில்லஸ் துரிங்ஜெனிஸிஸ் வர் குர்ஷ்டகி 5% டபிள்யு . பி 1000-1250 கிராம் / எக்டர் அல்லது பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதெனும் ஒன்றை பயன்படுத்தவும் ஆசாடிரச்டின் 0.03% டபிள்யு.எஸ்.பி 2500-5000 கிராம் / எக்டர் அல்லது எமமெக்டின் பென்சோயேட் 5% எஸ்ஜி 220 கிராம் / எக்டர்
48Greengram
Blue butterfly
நீல பட்டாம்பூச்சி
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5% எஸ்சி 100 மிலி / எக்டர் ஃப்ளூபெண்டியாமைடு 39.35% எஸ்சி 100 மிலி / எக்டர் லுஃபெனூரான் 5.4% EC 600 மிலி / எக்டர்
49Greengram
Spotted pod borer
புள்ளிக் காய் துளைப்பான்
இனக்கவர்ச்சிப் பொறிகள் எக்டருக்கு 12 வைத்துக் கட்டுபடுத்தலாம் அல்லது பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் தியோடிகார்ப் 75% WP 625 கிராம் / எக்டர் அல்லது குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5% எஸ்சி 100 மிலி / எக்டர்
50Greengram
Spiny pod borer
ஸ்பைனி காய் துளைப்பான்
இனக்கவர்ச்சிப் பொறிகள் 50 மீட்டர் இடைவெளியுடன் எக்டருக்கு 5 வைத்துக் கட்டுபடுத்தலாம் அல்லது பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதெனும் ஒன்றை பயன்படுத்தவும் வேப்பங் கொட்டைசாறு 5 சதம் அதைத் தொடர்ந்து ட்ரைசோபோஸ் 0.05% அல்லது குயினல்போஸ் 25 ஈசி @ 1000 மில்லி / ஹெக்டேர்
51Greengram
Gram pod borer
பச்சைக் காய்த் துளைப்பான்
இனக்கவர்ச்சிப் பொறிகள் எக்டருக்கு 12 வைத்துக் கட்டுபடுத்தலாம் பேசில்லஸ் துரிங்ஜெனிஸிஸ் வர் குர்ஷ்டகி 5% டபிள்யு . பி 1000-1250 கிராம் / எக்டர் அல்லது பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதெனும் ஒன்றை பயன்படுத்தவும் ஆசாடிரச்டின் 0.03% டபிள்யு.எஸ்.பி 2500-5000 கிராம் / எக்டர் அல்லது எமமெக்டின் பென்சோயேட் 5% எஸ்ஜி 220 கிராம் / எக்டர்
52Greengram
Field bean pod borer
பீல்டுபீன் காய் துளைப்பான்
இனக்கவர்ச்சிப் பொறிகள் 50 மீட்டர் இடைவெளியுடன் எக்டருக்கு 5 வைத்துக் கட்டுபடுத்தலாம் பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதெனும் ஒன்றை பயன்படுத்தவும் ஆசாடிரச்டின் 0.03% டபிள்யு.எஸ்.பி 2500-5000 கிராம் / எக்டர் குளோர்பைரிபாஸ் 20 இசி 1250 மிலி / எக்டர் எமமெக்டின் பென்சோயேட் 5% எஸ்ஜி 220 கிராம் / எக்டர்
53Greengram
Tur pod fly
துவரை காய் ஈ
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் ஆசாதிராச்ச்டின் 0.03% WSP 2.5 கிலோ / எக்டர் அல்லது குளோர்பைரிபாஸ் 20 இசி 1250 மிலி / எக்டர் அல்லது எமமெக்டின் பென்சோயேட் 5% எஸ்ஜி 220 கிராம் / எக்டர்
54Greengram
Stem fly
தண்டு ஈ
விதைகளை டைமெத்தோயேட் 30% EC 5 மில்லி / கிலோ என்ற வீதம் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும் விதை முளைத்த ஒரு வாரத்தில் இமிடேச்லோப்ரிட் 70% WG 500 மிலி /எக்டர் தெளிக்கவும் மீண்டும் 10 நாட்கள் நாட்கள் இடைவெளியில் மீண்டும் தெளிக்கவும் அல்லது வேப்பங் கொட்டைசாறு 5 சதம் தெளிக்கவும்
55Greengram
Pod bug
காய் நாவாய்ப்பூச்சி
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் டைம்தோயேட் எக்டருக்கு 30% EC 500 மிலி அல்லது மெத்தில் டெமட்டன் 25% EC 500 மிலி / எக்டர் அல்லது இமிடாக்ளோப்ரிட் 17.8 எஸ்.எல் 125 மில்லி / எக்டர்
56Greengram
Lab lab bug
அவரை நாவாய்ப்பூச்சி
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் டைம்தோயேட் எக்டருக்கு 30% EC 500 மிலி அல்லது மெத்தில் டெமட்டன் 25% EC 500 மிலி / எக்டர்
57Greengram
Bean aphid
பீன்ஸ் அசுவினி
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும் (தெளித்திரவம் அளவு ஹெக்டேருக்கு 500 லிட்டர்): மீத்தைல் டெமிட்டான் 25 EC 500 மி.லி / ஹெக்டர் டைமித்தொயேட் 30 EC 500 மி.லி / ஹெக்டர்
58Greengram
Leaf hopper
தத்துப்பூச்சி
ஒரு ஹெக்டேருக்கு 700 முதல் 1000 லிட்டர் நீரில் மீதில் ஓ டெமோட்டன் 750 மில்லி கொண்டு தெளிக்கவும்
59Greengram
White fly
வெள்ளை ஈ
வேப்பங் கொட்டைசாறு 5 சதம் அல்லது வேப்ப எண்ணெய் 3% பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை பதினைந்து நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும் இமிடாக்ளோப்ரிட் 17.8 எஸ்.எல் 125 மில்லி / எக்டர் அல்லது அசிடமிப்ரிட் 20% SP 100 கிராம் / எக்டர்
60Greengram
Eriyophid mite
ஈரீயோஃபைட் சிலந்தி
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதெனும் ஒன்றை பயன்படுத்தவும் டிகோஃபோல் 18.5 ஈசி 1.0 லிட்டர் அல்லது டைம்தோயேட் 30 ஈசி 1.0 லிட்டர் அல்லது ஃபோசலோன் 35 ஈசி 1.0 லிட்டர் எக்டருக்கு 700 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
61Greengram
Leaf webber
இலை வெபர்
தரை மட்டத்தில் இரவு 8 முதல் 11 மணி வரை விளக்கு பொறியை அமைக்கவும் ஹெக்டேருக்கு பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் மெத்தில் டிமெட்டன் 25 இசி 1000 மில்லி அல்லது குயினல்போஸ் 25 இசி 1400 மில்லி
62Greengram
Leaf roller
இலை ரோலர்
வேப்பங் கொட்டைசாறு 5 சதம் அல்லது வேப்ப எண்ணெய் 3% பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும் மெத்தில் டிமெட்டன் 25 இசி 1000 மில்லி/ஹெக்டேர் அல்லது குயினல்போஸ் 25 இசி 1400 மில்லி/ஹெக்டேர்
63Greengram
Lab lab leaf miner
அவரை சுருள்பூச்சி
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதெனும் ஒன்றை பயன்படுத்தவும் ஃப்ளூபெண்டியாமைடு 39.35% எஸ்சி 150 மிலி / எக்டர் இந்தோக்சாகார்ப் 15.8% இசி 330 மிலி / எக்டர் ப்ராபெனோபோஸ் 50% EC 1.0 l / ha
64Greengram
Blister bettle
பிலிஸ்டர் வண்டு
கோடையில் வயல்களை ஆழமாக உழுதல் சரியான நேரத்தில் விதைப்பு செய்ய வேண்டும் வளர்ந்த லார்வாக்கள் மற்றும் வண்டுகளை சேகரித்து அழிக்கவும் வேப்ப விதை கர்னல் சாறு (எக்டருக்கு 25 கிலோ) தெளிக்கவும்
65Greengram
Flower webber
பூ வெபர்
தரை மட்டத்தில் இரவு 8 முதல் 11 மணி வரை விளக்கு பொறியை அமைக்கவும் ஹெக்டேருக்கு பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் மெத்தில் டிமெட்டன் 25 இசி 1000 மில்லி குயினல்போஸ் 25 இசி 1400 மில்லி
66Greengram
bean aphid
பீன்ஸ் அசுவினி
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும் (தெளித்திரவம் அளவு ஹெக்டேருக்கு 500 லிட்டர்): மீத்தைல் டெமிட்டான் 25 EC 500 மி.லி / ஹெக்டர் டைமித்தொயேட் 30 EC 500 மி.லி / ஹெக்டர்
67Cowpea
Gram pod borer
பச்சைக் காய்ப்புழு
இனக்கவர்ச்சிப் பொறிகள் எக்டருக்கு 12 வைத்துக் கட்டுபடுத்தலாம் பேசில்லஸ் துரிங்ஜெனிஸிஸ் வர் குர்ஷ்டகி 5% டபிள்யு . பி 1000-1250 கிராம் / எக்டர் அல்லது பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதெனும் ஒன்றை பயன்படுத்தவும் ஆசாடிரச்டின் 0.03% டபிள்யு.எஸ்.பி 2500-5000 கிராம் / எக்டர் குளோர்பைரிபாஸ் 20 இசி 1250 மிலி / எக்டர்
68Cowpea
Spotted pod borer
புள்ளிக் காய் துளைப்பான்
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் தியோடிகார்ப் 75% WP 625 கிராம் / எக்டர் குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5% எஸ்சி 100 மிலி / எக்டர்
69Cowpea
Spiny pod borer
ஸ்பைனி காய் துளைப்பான்
புழுக்களையும் வளர்ந்த பூச்சிகளையும் சேகரித்து அழிக்கவும் இனக்கவர்ச்சிப் பொறிகள் 50 மீட்டர் இடைவெளியுடன் எக்டருக்கு 5 வைத்துக் கட்டுபடுத்தலாம் இரண்டு முறை வேப்பங் கொட்டைசாறு 5 சதம் அதைத் தொடர்ந்து ட்ரைசோபோஸ் 0.05% /ஹெக்டேர்
70Cowpea
Blue butterfly
நீல பட்டாம்பூச்சி
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5% எஸ்சி 100 மிலி / எக்டர் ஃப்ளூபெண்டியாமைடு 39.35% எஸ்சி 100 மிலி / எக்டர் லுஃபெனூரான் 5.4% EC 600 மிலி / எக்டர்
71Cowpea
Grass blue butterfly
கிராஸ் ப்ளூ பட்டாம்பூச்சி
லார்வாக்கள், பியூபா மற்றும் வளர்ந்த பூச்சிகளைத் தேர்ந்தெடுத்து அழிக்கவும். பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதெனும் ஒன்றை பயன்படுத்தவும் ஆசாடிரச்டின் 0.03% டபிள்யு.எஸ்.பி 2500-5000 கிராம் / எக்டர் குளோர்பைரிபாஸ் 20 இசி 1250 மிலி / எக்டர்
72Cowpea
Bean aphid
பீன்ஸ் அசுவினி
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும் (தெளித்திரவம் அளவு ஹெக்டேருக்கு 500 லிட்டர்): மீத்தைல் டெமிட்டான் 25 EC 500 மி.லி / ஹெக்டர் டைமித்தொயேட் 30 EC 500 மி.லி / ஹெக்டர்
73Cowpea
Leaf hopper
தத்துப்பூச்சி
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் வேப்பங் கொட்டைசாறு 5 சதம் (அ) இமிடாக்ளோப்ரிட் 70% WG @ 30-35 கிராம் / எக்டர் (அ) ப்ராபெனோபோஸ் 50% EC 1000 மிலி / எக்டர் (அ) அசிடமிப்ரிட் 20% எஸ்பி 50 கிராம் / எக்டர்
74Cowpea
Pod bug
காய் நாவாய்ப்பூச்சி
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் டைம்தோயேட் எக்டருக்கு 30% EC 500 மிலி மெத்தில் டெமட்டன் 25% EC 500 மிலி / எக்டர்
75Cowpea
Lab lab bug
அவரை நாவாய்ப்பூச்சி
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் டைம்தோயேட் எக்டருக்கு 30% EC 500 மிலி மெத்தில் டெமட்டன் 25% EC 500 மிலி / எக்டர்
76Cowpea
White fly
வெள்ளை ஈ
எக்டருக்கு 12 எண்கள் மஞ்சள் ஒட்டும் பொறிகளைக் கொண்டு கண்காணித்தல் வேம்பு விதை கர்னல் சாறு 5% அல்லது வேப்ப எண்ணெய் 3% பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை பதினைந்து நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும் இமிடாக்ளோப்ரிட் 17.8 எஸ்.எல் 125 மில்லி / எக்டர் அல்லது டைம்தோயேட் 30% EC 500 மில்லி / ஹெக்டேர்
77Cowpea
Blister bettle
பிலிஸ்டர் வண்டு
கோடையில் வயல்களை ஆழமாக உழுதல் சரியான நேரத்தில் விதைப்பு செய்ய வேண்டும் வளர்ந்த லார்வாக்கள் மற்றும் வண்டுகளை சேகரித்து அழிக்கவும் வேப்பங் கொட்டைசாறு 5 சதம் (எக்டருக்கு 25 கிலோ) தெளிக்கவும்
78Horsegram
Gram pod borer
பச்சைக் காய்த் துளைப்பான்
இனக்கவர்ச்சிப் பொறிகள் எக்டருக்கு 12 வைத்துக் கட்டுபடுத்தலாம் பேசில்லஸ் துரிங்ஜெனிஸிஸ் வர் குர்ஷ்டகி 5% டபிள்யு . பி 1000-1250 கிராம் / எக்டர் அல்லது பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதெனும் ஒன்றை பயன்படுத்தவும் ஆசாடிரச்டின் 0.03% டபிள்யு.எஸ்.பி 2500-5000 கிராம் / எக்டர் குளோர்பைரிபாஸ் 20 இசி 1250 மிலி / எக்டர்
79Horsegram
Spotted pod borer
புள்ளிக் காய் துளைப்பான்
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் தியோடிகார்ப் 75% WP 625 கிராம் / எக்டர் குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5% எஸ்சி 100 மிலி / எக்டர்
80Horsegram
Spiny pod borer
ஸ்பைனி காய் துளைப்பான்
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதெனும் ஒன்றை பயன்படுத்தவும் ஆசாடிரச்டின் 0.03% டபிள்யு.எஸ்.பி 2500-5000 கிராம் / எக்டர் குளோர்பைரிபாஸ் 20 இசி 1250 மிலி / எக்டர் எமமெக்டின் பென்சோயேட் 5% எஸ்ஜி 220 கிராம் / எக்டர்
81Horsegram
Blue butterfly
நீல பட்டாம்பூச்சி
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5% எஸ்சி 100 மிலி / எக்டர் ஃப்ளூபெண்டியாமைடு 39.35% எஸ்சி 100 மிலி / எக்டர் லுஃபெனூரான் 5.4% EC 600 மிலி / எக்டர்
82Horsegram
Grass blue butterfly
கிராஸ் ப்ளூ பட்டாம்பூச்சி
லார்வாக்கள், பியூபா மற்றும் வளர்ந்த பூச்சிகளைத் தேர்ந்தெடுத்து அழிக்கவும். பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதெனும் ஒன்றை பயன்படுத்தவும் ஆசாடிரச்டின் 0.03% டபிள்யு.எஸ்.பி 2500-5000 கிராம் / எக்டர் குளோர்பைரிபாஸ் 20 இசி 1250 மிலி / எக்டர்
83Horsegram
Bean aphid
பீன்ஸ் அசுவினி
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும் (தெளித்திரவம் அளவு ஹெக்டேருக்கு 500 லிட்டர்): மீத்தைல் டெமிட்டான் 25 EC 500 மி.லி / ஹெக்டர் டைமித்தொயேட் 30 EC 500 மி.லி / ஹெக்டர்
84Horsegram
Leaf hopper
தத்துப்பூச்சி
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் வேப்பங் கொட்டைசாறு 5 சதம் (அ) இமிடாக்ளோப்ரிட் 70% WG @ 30-35 கிராம் / எக்டர் (அ) ப்ராபெனோபோஸ் 50% EC 1000 மிலி / எக்டர் (அ) அசிடமிப்ரிட் 20% எஸ்பி 50 கிராம் / எக்டர்
85Horsegram
Pod bug
காய் நாவாய்ப்பூச்சி
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் டைம்தோயேட் எக்டருக்கு 30% EC 500 மிலி மெத்தில் டெமட்டன் 25% EC 500 மிலி / எக்டர்
86Horsegram
Lab lab bug
அவரை நாவாய்ப்பூச்சி
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் டைம்தோயேட் எக்டருக்கு 30% EC 500 மிலி அல்லது மெத்தில் டெமட்டன் 25% EC 500 மிலி / எக்டர்
87Horsegram
White fly
வெள்ளை ஈ
வேப்பங் கொட்டைசாறு 5 சதம் அல்லது வேப்ப எண்ணெய் 3% பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை பதினைந்து நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும் இமிடாக்ளோப்ரிட் 17.8 எஸ்.எல் 125 மில்லி / எக்டர் அல்லது அசிடமிப்ரிட் 20% SP 100 கிராம் / எக்டர்
88Horsegram
Blister bettle
பிலிஸ்டர் வண்டு
கோடையில் வயல்களை ஆழமாக உழுதல் வேண்டும் சரியான நேரத்தில் விதைப்பு செய்ய வேண்டும் வளர்ந்த லார்வாக்கள் மற்றும் வண்டுகளை சேகரித்து அழிக்கவும் வேப்பங் கொட்டைசாறு 5 சதம் (எக்டருக்கு 25 கிலோ) தெளிக்கவும்
89Bengalgram
Blue butterfly
ப்ளூ பட்டர்பிளை
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5% எஸ்சி 100 மிலி / எக்டர் ஃப்ளூபெண்டியாமைடு 39.35% எஸ்சி 100 மிலி / எக்டர் லுஃபெனூரான் 5.4% EC 600 மிலி / எக்டர்
90Bengalgram
Spotted pod borer
புள்ளிக் காய் துளைப்பான்
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் தியோடிகார்ப் 75% WP 625 கிராம் / எக்டர் குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5% எஸ்சி 100 மிலி / எக்டர்
91Bengalgram
Spiny pod borer
ஸ்பைனி காய் துளைப்பான்
புழுக்களையும் வளர்ந்த பூச்சிகளையும் சேகரித்து அழிக்கவும் இனக்கவர்ச்சிப் பொறிகள் 50 மீட்டர் இடைவெளியுடன் எக்டருக்கு 5 வைத்துக் கட்டுபடுத்தலாம் இரண்டு முறை வேப்பங் கொட்டைசாறு 5 சதம் அதைத் தொடர்ந்து ட்ரைசோபோஸ் 0.05% /ஹெக்டேர்
92Bengalgram
Gram pod borer
பச்சைக் காய்ப்புழு
இனக்கவர்ச்சிப் பொறிகள் எக்டருக்கு 12 வைத்துக் கட்டுபடுத்தலாம் பேசில்லஸ் துரிங்ஜெனிஸிஸ் வர் குர்ஷ்டகி 5% டபிள்யு . பி 1000-1250 கிராம் / எக்டர் அல்லது பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதெனும் ஒன்றை பயன்படுத்தவும் ஆசாடிரச்டின் 0.03% டபிள்யு.எஸ்.பி 2500-5000 கிராம் / எக்டர் குளோர்பைரிபாஸ் 20 இசி 1250 மிலி / எக்டர்
93Bengalgram
Bean aphid
பீன்ஸ் அசுவினி
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும் (தெளித்திரவம் அளவு ஹெக்டேருக்கு 500 லிட்டர்): மீத்தைல் டெமிட்டான் 25 EC 500 மி.லி / ஹெக்டர் டைமித்தொயேட் 30 EC 500 மி.லி / ஹெக்டர்
94Bengalgram
Leaf hopper
தத்துப்பூச்சி
தத்துப்பூச்சி பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் வேப்பங் கொட்டைசாறு 5 சதம் (அ) இமிடாக்ளோப்ரிட் 70% WG @ 30-35 கிராம் / எக்டர் (அ) ப்ராபெனோபோஸ் 50% EC 1000 மிலி / எக்டர் (அ) அசிடமிப்ரிட் 20% எஸ்பி 50 கிராம் / எக்டர்
95Bengalgram
Pod bug
காய் நாவாய்ப்பூச்சி
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் டைம்தோயேட் எக்டருக்கு 30% EC 500 மிலி மெத்தில் டெமட்டன் 25% EC 500 மிலி / எக்டர்
96Bengalgram
White fly
வெள்ளை ஈ
வேப்பங் கொட்டைசாறு 5 சதம் (அ) வேப்ப எண்ணெய் 3% பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை பதினைந்து நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும் இமிடாக்ளோப்ரிட் 17.8 எஸ்.எல் 125 மில்லி / எக்டர் (அ) அசிடமிப்ரிட் 20% SP 100 கிராம் / எக்டர்
97Bengalgram
Blister bettle
பிலிஸ்டர் வண்டு
கோடையில் வயல்களை ஆழமாக உழுதல் வேண்டும் சரியான நேரத்தில் விதைப்பு செய்ய வேண்டும் வளர்ந்த லார்வாக்கள் மற்றும் வண்டுகளை சேகரித்து அழிக்கவும் வேப்ப விதை கர்னல் சாறு (எக்டருக்கு 25 கிலோ) தெளிக்கவும்
98Soyabean
Gram pod borer
பச்சைக் காய்ப்புழு
இனக்கவர்ச்சிப் பொறிகள் எக்டருக்கு 12 வைத்துக் கட்டுபடுத்தலாம் பேசில்லஸ் துரிங்ஜெனிஸிஸ் வர் குர்ஷ்டகி 5% டபிள்யு . பி 1000-1250 கிராம் / எக்டர் அல்லது பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதெனும் ஒன்றை பயன்படுத்தவும் ஆசாடிரச்டின் 0.03% டபிள்யு.எஸ்.பி 2500-5000 கிராம் / எக்டர் குளோர்பைரிபாஸ் 20 இசி 1250 மிலி / எக்டர்
99Soyabean
Semi looper
காவடிப்புழு
புழுக்களையும் வளர்ந்த பூச்சிகளையும் சேகரித்து அழிக்கவும் இனக்கவர்ச்சிப் பொறிகள் 50 மீட்டர் இடைவெளியுடன் எக்டருக்கு 5 வைத்துக் கட்டுபடுத்தலாம் இரண்டு முறை வேப்பங் கொட்டைசாறு 5 சதம் அதைத் தொடர்ந்து ட்ரைசோபோஸ் 0.05% /ஹெக்டேர்
100Soyabean
Cut worm
வெட்டுப்புழுக்கள்
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும் குளோர்பைரிபாஸ் 20 இசி 3750 மிலி / எக்டர் டிஃப்ளூபென்சுரான் 25% WP 300-350 கிராம் / எக்டர் குளோரன்ட்ரானிலிப்ரோல் 18.5% எஸ்சி @ 150 மிலி / எக்டர்
101Soyabean
Termites
கரையான்
ஒரு கிலோ விதையுடன் 4 மிலி குலோர்ப்யரிபோஸ் விதை நேர்த்தி செய்து விதைக்கவும் பயிர் கழிவுகளை உடனடியாக அகற்றி நிலத்தை தூய்மையாக வைக்க வேண்டும் கரையான் புற்றுகளை அழிக்கவும்.
102Groundnut
Aphids
அசுவினி
பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
குளோரோபைரிபாஸ் 20% EC 1000 மி.லி /ஹெக்டேர்
இமிடாகுளோபிரிட் 17.8% SL100-125 மி.லி /ஹெக்டேர்
103Groundnut
Red Hairy caterpillars
ரோமப்புழு
வயலைச் சுற்றிலும் 30 செ.மீ நிளம் மற்றும் 25 செ.மீ அகலம் இருக்கும் அளவிற்கு சிறிய அளவில் குழிகள் அமைத்து அதன் முலம் புழுக்களை அழிக்கலாம்.
பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
பாசலான் 35 EC 750 மி.லி/ஹெக்டேர் என்ற அளவில் 375 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும் டைகுளோரோவாஸ் 76 EC 627 மி.லி/ஹெக்டேர்
104Groundnut
Groundnut leaf miner
சுருள்பூச்சி
விளக்குக்கவர்ச்சி பொறியை எக்டர்க்கு 12 வீதம் அமைத்து அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்
பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
டைமீத்தேயேட் 30 EC 660 மி.லி/ஹெக்டேர்
மாலத்தையான் 50 EC 1.25 மி.லி/ஹெக்டேர்
105Groundnut
Bihar hairy caterpillar
பீகார் ரோமப்புழு
களைகளை சேகரித்து அகற்றிவிட வேண்டும்
தட்டைபயிறு, ஆமணக்கு மற்றம் காட்டாமணக்கு ஆகிய பயிர்களை வயலின் வரப்புகளில் கவர்ச்சி பயிராக பயிரிட்டு ரோமப்புழுவை சேகரித்து அழிக்கலாம்.
பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும் பாசலான் 35 EC 750 மி.லி/எக்டர் 375 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும் டைகுளோரோவாஸ் 76 EC 627 மி.லி/எக்டர் .
106Groundnut
Jassids
தத்துப்பூச்சி
நிலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும்
ஊடுபயிராக கம்பை பயிர் செய்வதால் தத்துப் புச்சியைக் கட்டுப்படுத்தலாம்
டைமீத்தோயேட் 650 மிலி மருந்தை ஹெக்டர்க்கு 600 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
107Groundnut
Gram pod borer
அமெரிக்கன் காய் புழு
இனக்கவர்ச்சிப் பொறியை எக்டர்க்கு 5 வீதம் அமைத்து ஆண் அந்துப்பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்.
முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரைமா கைலானிஸ் எக்டர்க்கு 1 லட்சம் (அ) கிரைசோபெர்லா காரஇனக்கவர்ச்சிப் பொறிகள் எக்டருக்கு 12 வைத்துக் கட்டுபடுத்தலாம் பேசில்லஸ் துரிங்ஜெனிஸிஸ் வர் குர்ஷ்டகி 5% டபிள்யு . பி 1000-1250 கிராம் / எக்டர் அல்லது பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதெனும் ஒன்றை பயன்படுத்தவும் ஆசாடிரச்டின் 0.03% டபிள்யு.எஸ்.பி 2500-5000 கிராம் / எக்டர் குளோர்பைரிபாஸ் 20 இசி 1250 மிலி / எக்டர்
108Groundnut
Jewel Beetle
பொன்வண்டு
கோடையில் வயல்களை ஆழமாக உழுதல் வேண்டும் வளர்ந்த லார்வாக்கள் மற்றும் வண்டுகளை சேகரித்து அழிக்கவும் வேப்ப விதை கர்னல் சாறு (எக்டருக்கு 25 கிலோ) தெளிக்கவும்
109Groundnut
Tobacco caterpillar
புகையிலை வெட்டுப்புழு
விளக்குப் பொறி அமைத்து அந்துப்பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்
ஆமணக்கு பொறிப் பயிராக நடவு செய்யலாம் முட்டை குவியலையும் புழுக்களையும் கைகளல் சேகரித்து அழிக்கலாம்
பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
குயின்லாபாஸ் 25 EC 750 மி.லி /ஹெக்டர் டைக்குளோர்வாஸ்76WSC 750 மி.லி /ஹெக்டர்
110Groundnut
Groundnut bud borer
நிலக்கடலை மொக்குத்துளைப்பான்
வேப்பம் எண்ணெய் 3 சதம் (அ) நொச்சி சாறு 5 சதம் ஆகியவற்றைத் தெளித்து வளர்ச்சியடைந்தப் புழுவைக் கட்டுப்படுத்தலாம்
கூட்டுப்புழு ஒட்டுண்ணியான பிராக்கிமெரியாவை பயன்படுத்தி அந்துப்பூச்சியின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம
111Gingelly
Shoot and Leaf webber
குருத்து மற்றும் இலை வெப்பர்
வேம்பு விதை கர்னல் சாறு 5% அல்லது வேப்ப எண்ணெய் 2% ஏதேனும் ஒன்றை பதினைந்து நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும். பூச்சிக்கொல்லி கார்பரில் 50 WP 1000 கிராம் / எக்டர் அளவில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
112Gingelly
Whitefly
வெள்ளை ஈ
வேப்பங் கொட்டைசாறு 5 சதம் அல்லது வேப்ப எண்ணெய் 3% பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை பதினைந்து நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும் மீத்தைல் டெமிட்டான் 25% EC 1200 மில்லி / எக்டர் அல்லது குயினால்பாஸ் 25% இ.சி 2 லி/ஹெக்டேர்
113Gingelly
Pod borer
காய் புழு
வேம்பு விதை கர்னல் சாறு 5% அல்லது வேப்ப எண்ணெய் 2% ஏதேனும் ஒன்றை பதினைந்து நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும். பூச்சிக்கொல்லி கார்பரில் 50 WP 1000 கிராம் / எக்டர் அளவில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
114Gingelly
APHIDS
அசுவினி:
இமிடோகுளோர்பிட் (5 கி/கி.கி விதை)மூலம் விதை நேர்த்திச்செய்த விதைகளை விதைக்க வேண்டும் நடவு செய்த 20,40 மற்றும் 60 நாட்கள் கழித்து மோனோகுரோட்டபாஸ் மற்றும் தண்ணீருடன் கலந்த கலவையை 1:4 என்ற விகிதத்திலும் அல்லது இமிட்டோகுளோர்பிட், தண்ணீர் கலந்த கலவையை 1:20 என்ற விகிதத்திலும் தண்டின் மேல் தெளிக்க (அ) வண்ணம் பூச வேண்டும்
115Sunflower
Capitulum borer (Head borer)
தலைத் துளைப்பான்
ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிராமா (20,000/ஏக்கர்) பிரக்கான் வகைகள், கேம்போலெட்டிஸ் வகைகளை வயலில் வெளியிடலாம்.
ஹெச். என். பி.வி 250 எல்.இ. + பிடி 0.5 கிலோ /ஹெக்டர் என்ற அளவில் தெளிக்கலாம்
116Castor
Serpentine leaf miner
ஆமணக்கு சுருள் பூச்சி
வேப்பங் கொட்டைசாறு 5 சதம் (அ) ட்ரைகோபாஸ் 2.5 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
117Castor
Capsule Borer
தண்டு மற்றும் காய்த்துளைப்பான்
மாலதியோன் 50 இசி 2.0 எல் / எக்டரில் இருந்து மூன்று முறை
மூன்று வார இடைவெளியில் பூக்கும் தருணத்தில் இருந்து தெளிக்கவும்
118Castor
Semiloopers
ஆமணக்கு காவடிப்புழு
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றை தெளிக்கவும்
மூன்று வார இடைவெளியில் பூப்பதில் இருந்து மூன்று முறை:
மாலதியோன் 50 இசி 2000 மிலி / எக்டர்
டிமெத்தோயேட் 30 இசி @ 825 மிலி / எக்டர்
வேப்ப விதை கர்னல் சாறு 5% + 2% வேப்ப எண்ணெயைப் பயன்படுத்துங்கள்
119Castor
jassid
தத்துப்பூச்சி
நிலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும் இமிட்குளோரோபிட் (அ) கரர்போசல்பான் இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தினால் விதை நேர்த்தி செய்த பிறகு பயிரிடலாம் டைமீத்தோயேட் 0.05 சதம் தெளித்து சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
120Cotton
American boll worm
அமெரிக்கன் காய் புழு
7வது மற்றும் 12வது வாரங்களில் மாலை நேரத்தில் என்.பி.வி வைரஸை ஒரு ஹெக்டர்க்கு 250 மிலி தெளிக்கவும். விதைப்பு செய்த 45 நாட்கள் கழித்து ட்ரைக்கோகிரம்மா 6.25 சி.சி / எக்டருக்கு 15 நாள் இடைவெளியில் மூன்று முறை பயன்படுத்தவும். காய்க்கும் மற்றும் காய் முற்றும் பருவத்தில், ஒரு ஹெக்டர்க்கு இமாமேக்ட்டின் பேன்ஸ்ஓட் 5% SG 190-220 கிராம் அல்லது பிப்ரோனில் SC 2000 மில்லி தெளிக்கவும்
121Cotton
Whitefly
வெள்ளை ஈ
வெள்ளை ஈ -யின் நடமாட்டத்தை கண்டறிந்து அழிக்க விதைத்த 60 மற்றும் 90 வது நாளில் மஞ்சள் நிற ஒட்டு பொறி 12/ ஹெக் அளவில் வைக்கலாம். பொருளாதார சேதார நிலையை கடக்கும் பொது புப்ரோபிசின் 25% SC 10 மில்லி மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
122Cotton
Pink bollworm
இளஞ்சிகப்பு காய்ப் புழு
இளம் சிவப்பு காய் புழுவின் நடமாட்டத்தை அறிய இனக்கவர்ச்சி பொறிகள் ஒரு ஹெக்டருக்கு 12 பொறிகள் அமைக்கவும். இமாமேக்ட்டின் பென்ஸ்ஓட் 5% SG 190 – 220 கி அல்லது கிலோர்பயறிபாஸ் 50% EC 1000 – 1200 மில்லி ஒரு ஹெக்டருக்கு தெளிக்கவும்
123Cotton
Aphids
அஸ்வினி பூச்சி
ஒரு கிலோ விதைக்கு இமிடகிலோபிரிட் 70 WS 7 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யவும். மஞ்சள் நிற ஒட்டு பொறி 12/ ஹெக் அளவில் வைக்கலாம். எட்டு வாரங்களுக்கு பிறகு ஹெக்டருக்கு அசாடிராக்ட்டின் 0.03% EC 2500 மில்லி அல்லது புப்ரோபிசின் 25%SC 1000 மில்லி தெளிக்கவும்.
124Cotton
shoot borer
தண்டு துளைப்பான்
கார்போபியூரான் 3 ஜி 30 கிலோவை 20 வது நாளில் மண்ணில் இடவும். தொழு உரம் 25 டன் / எக்டர் அல்லது வேப்பம் புண்ணாக்கு 250 கிலோ / ஹெக்டர் அடியுரமாக இடவும்.
125Cotton
mealy bug
மாவுப்பூச்சி பீனோகாக்கஸ் வகை
வயல் வரப்பில் உள்ள களைகள் மற்றும் புல்களை அகற்றவும். பின்வரும் பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம் (எக்ருக்கு) ப்ரோபெனோபாஸ் 50EC 1.25 லிட்டர் வேப்பெண்ணெய் 2% (20மிலி/லிட்டர்) வேப்பங்கொட்டைச் சாறு 5% (50 கிராம்/லிட்டர்) மீன் எண்ணெய் சோப் 25 கிராம் / லிட்டர்
126Cotton
red cotton bug
சிவப்பு பருத்தி நாவாய்ப்பூச்சி
வயலை உழுது மண்ணில் முட்டையை வெளிக் கொண்டு கொண்டு வந்து அழிக்க வேண்டும்.
127Cotton
shoot weevil
தண்டு கூண்வண்டு
தண்டில் தரையை ஒட்டிய பகுதியில் முட்டை இடுவதை தவிர்க்க மண் அணைக்கவும். ஹெக்டருக்கு தொழு உரம் 25 டன் மற்றும் 250 கி வேப்பம் புண்ணாக்கு அடியுரமாக இடவும். இதனை தொடர்ந்து 15 மற்றும் 20வது நாளில் தண்டின் அடி பாகம் நனையும் படி ஹெக்டருக்கு கிலோர்பயிரிபாஸ் 50 EC 1200 மில்லி தெளித்து மண் அணைக்கவும்
128Cotton
leaf hopper
பச்சை தத்துபூச்சி
வயல் வரப்பில் உள்ள களைகள் மற்றும் புல்களை அகற்றவும். இமிடுபகுளிபிரிட் 40 SL 600 (மில்லி/எக்டர்) அல்லது வேம்பு விதைச் சாறு 5% 25 (கிலோ/எக்டர்) தெளிக்கவும். பூச்சியன் தாக்குதலானது அதிகமாக இருக்கும் போது வேப்பு எண்ணெய் கலவை 0.5% அல்லது வேப்பு எண்ணெய் 3% என்ற விகிகத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என்ற இடைவெளி விட்டு தெளிக்கவும்.
129Sugarcane
Aphid
பஞ்சு அஸ்வினி
அதிகப்படியான நைட்ரஜன் அல்லது அம்மோனியம் உரமிடுதலைத் தவிர்க்கவும். பூச்சித் தாக்குதல் உள்ள கரணைகளை நடவுக்குப் பொருளாக பயன்படுத்தக் கூடாது. ஒரு எக்டருக்கு மோனோக்ரோடோபோஸ் 36%SL @ 1.50 lit தெளிக்கவும்
130Sugarcane
internode borer
இடைக்கணுப் புழு
நட்ட 150வது மற்றும் 210வது நாளில் சோகை உரித்து அதனை மண்ணில் பரப்பி அல்லது புதைத்து விட வேண்டும். முட்டை ஒட்டுண்ணியான ட்ரிக்கோகிராம்மா கைலோனிஸ் ஒரு எக்டருக்கு 2.5 சிசி என்ற அளவில் நான்காவது மாதத்தில் இருந்து ஒவ்வொரு 15 நாளுக்கு ஒரு முறை வயலில் விட வேண்டும்.
131Sugarcane
Early shoot borer
குருத்துத் துளைப்பான்
ஸ்டர்மியோப்சிஸ் இன்பெரன்ஸ்ன் கிராவிட் பெண் பூச்சிகள் 125 னை ஒரு ஏக்கர் நிலத்தில் நடவு செய்த 30 மற்றும் 40வது நாளில் வயலில் விடவும். அல்லது வேப்பம் கொட்டை கரைசல் 5% அல்லது ஒரு எக்டருக்கு க்ளோரைன்ட்ரானிலிப்ரோல் 0.4% G @ 18.75 g அல்லது பிப்ரோனில் 5% SC @1.5 lit தெளிக்கவும்
132Sugarcane
scale insects
செதில் பூச்சி
செதில் பூச்சித் தாக்குதலற்ற விதைக் கரணைகளைத் தேர்வு செய்து வெந்நீரில் நனைத்த பின் நடவேண்டும். நீண்ட நேரத்திற்கு வயலில் நீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்ளவும். 150 - 210 வது நாட்களில் சோகை உரித்தல் அவசியம். இதனை தொடர்ந்து பார் வரிசையாக விட்டம் கட்ட வேண்டும். ஒரு எக்டருக்கு மோனோகுரோட்டோபாஸ் 36%SL @ 1.50 லி தெளிக்கவும்
133Sugarcane
white grub
சாம்பல் நிற வண்டு:
பயிர் சுழற்சி, கோடை காலத்தில் ஆழ உழவு, பாதித்த வயலில் மறுதாம்பு பயிரை தவிர்க்கவும், போதிய அளவு நீர் பாசனம் கொடுக்கவும். கியுனால்பாஸ் 5ஜி @ 25 கி.கி/ஹெ என்ற அளவில் பயன்படுத்தவும். உயிரியல் முறை: ஒரு எக்டருக்கு 2.5 கி.கி Beauveria brongniortii தொழுஉரத்துடன் கலந்து சாம்பல் நிற வண்டு தாக்கிய இடங்களில் தெளிக்க வேண்டும்.
134Sugarcane
top borer
நுனிக்குருத்துப் புழு
முன் கூட்டுப்புழு ஒட்டுண்ணியான கேம்பிராய்டஸ் (ஐசோதிமா) ஜாவென்சிஸை 100 ஜோடிகள்/ ஹெ என்ற அளவில் வயலில் விடலாம். ஒட்டுண்ணிகளால் அழிக்கப்படாத முட்டைக் குவியலை சேகரித்து 30 சல்லடை நைலான் பைகளில் போட்டு வைத்தால், முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் அழிக்கப்படும். ஒரு எக்டருக்கு க்ளோரைன்ட்ரானிலிப்ரோல் 18.5% SC @ 375 mLதெளிக்கவும்
135Tomato
Serpentine leaf miner
இலை துளைப்பான்
1. துளைக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கலாம்
2.வேப்பங்கோட்டை வடிநீர் 3 சதம் தெளிக்க வேண்டும்
136Tomato
Fruit Borer
காய்ப்புழு
1. தாக்கப்பட்ட பழங்கள் மற்றும் வளர்ந்த புழுக்களையும் சேகரித்து அழிக்கவும்.

2 . நாற்பது நாள் வயதுள்ள ஆப்ரிக்கன் உயர சாமந்தி பூச்செடிகளை கவர்ச்சிப்பயிராக 16 வரிசை தக்காளி செடிக்கு 1 வரிசை பூச்செடி பயிரிடலாம்

3 இனக்கவர்ச்சிப் பொறி ஹெலியூர் ஹெக்டேர்க்கு 12 வைக்கவுமமுட்டை ஒட்டுண்ணிப்பான ட்ரைக்கோகிராம்மா பெரிடோசம் ஹெக்டேருக்கு 1,00,000 எனும் அளவில் வாரம் ஒரு முறையாக பூ புக்கும்
137Tomato
Budworm
Budworm
Budworm
138Tomato
Fruit borer
Kaipuzhu
Kaipuzhu
139Brinjal
Shoot and fruit borer
குருத்து மற்றும் காய்த்துளைப்பான்
1.பாதிக்கப்பட்ட அல்லது சேதப்பட்ட இளங்குருத்து அல்லது நுனித்தண்டு மற்றும் சேகரித்து அழிக்கவும்.
2. ஒரே நிலத்தில் தொடர்ச்சியாக கத்திரி பயிரிடுவதை தவிர்க்கவும்
3. உட்பரவல் அதிகமாக உள்ள இடங்களில் நீளம் மற்றும் குறுகலான காய் உள்ள ரகங்களை பயிரிடவும்.
4. ஒரு ஹெக்டேருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறி அமைக்கவும் யிரிடவும்.
5. ப்ரைஸ்டோமரஸ் டெஸ்டுசியஸ் மற்றும் செராமஸ்டஸ் பெலவோரிப்டெலில் ஒட்
140Brinjal
Stem borer
தண்டு துளைப்பான்
1. சேதமடைந்த மற்றும் இறந்த செடிகளை சேகரித்து அழிக்கவும்
2. ஹெக்டேருக்கு ஒரு விளக்குபொறி அமைத்து âச்சிகளை சேகரித்து அழிக்கவும்
3.வேப்பம் எண்ணெய் 2 மி.லி/லிட்டர் தெளிக்கவும்
4. செயற்கை ஃபயிரிதிரைடுகள் உபயோகிப்பதை தவிர்க்கவும்
141Brinjal
Stem borer
Stem borer
Stem borer
142Bhendi
Yellow mosaic virus
Yellow mosaic virus
YMV
143Chillies
Chilli thrips
மிளகாய் பேன்
1. ஊடுபயிராக அகத்திய பயிரிடவும் இதன் நிழலானது மிளகாய்பேன் உயிர்தொகையை முறைப்படுத்துகிறது
2. சோளம் பயிரிட்ட நிலத்தில் மிளகாய் உடனடியாக சாகுபடி செய்யக்கூடாது
3.மிளகாயில் வெங்காயத்தை ஊடுபயிராக சாகுபடி செய்யக்கூடாது
4. நாற்றுகளின் மேற்பரப்பில் நீரைத் தெளித்தால் பேன்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
5. நாற்றுகளில் மீது தண்ணீரை தெளிப்பதன் மூலம் இலைப்பேனின் பெருக்கமானது கட்டு
144Chillies
Yellow mite or muranai mite
மஞ்சள் முரனைச் சிலந்தி
1 வயலில் இறை விழுங்கும் சிலந்தியான அம்ளிசியஸ் ஒவலிஸ்ன் நடமாட்டத்தை அதிகப்படுத்தவும்

2. போரேட் 10% @10 கி.கி/எக்டர் என்ற அளவில் தெளிக்கவும் அல்லது
* ப்ரோபைசின் 25 % SC 8.0 மி /10 லி
* க்ளோர்பெனாபயர் 10 % SC 1.5 மி / லி
145Chillies
Gram caterpillar
கடலைப்புழு
சேதப்படுத்தப்பட்ட காய்கள் மற்றும் வளர்ந்த புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
இனக்கவர்ச்சிப்பொறி “ஹெலியூர்” ஹெக்டேருக்கு 15 வைக்கவும்
முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிராம்மா கைலோனிஸ் ஹெக்டேருக்கு 50000 அளவில் வாரம் ஒரு முறையாக 6 முறை வயலில் விடவேண்டும்.
இறை விழுய்கியான க்ரைசோபேர்லா கார்னியா வை விதைத்த 30 நாட்களுக்கு பிறகு 50,000 முட்டை அல்லது இளம்புழு என்ற வீதம் ஒரு வார இடைவெளி விட்டு வ
146Cucumber
Leaf Miner
இலை துளைப்பான்
மாலை வேலைகளில் குளோர்பைரிபாஸ் 20 இ.சி. ஒரு எக்டருக்கு 1250 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்
147Potato
Cut worms
வெட்டுப்புழுக்கள்
தரிசு காலங்களில் மண்ணை நன்கு கிளறி, புழுக்களை வெளிக்கொணர்ந்து அழிக்கவேண்டும்.
தாய்ப்பூச்சிகளை விளக்குப்பொறி வைத்து கவர்ந்தழிக்கவேண்டும்.
சுழல் தெளிப்புப் பாசனம் உள்ள இடங்களில் தெளிப்பானைக் காலை நேரங்களில் இயங்கச் செய்யவேண்டும். நீரின் வேகத்தால் புழுக்கள் மண்ணிலிருந்து வெளிக்கொணரப்பட்டு பறவைகளுக்கு இரையாகிவிடும்.
குளோரிபைரிபாஸ் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து செடிகளின் தண்டுப்பக
148Potato
Nematodes
நூற்புழுக்கள்
உருளைக்கிழங்கு இனத்தைச் சாராத பயிர் வகைகளனா கோதுமை, மக்காச்சோளம், பீன்ஸ் போன்ற பயிர்களைப் பயிரிடவேண்டும். அல்லது காய்கறிப் பயிர்களான முட்டைக்கோசு, பூக்கோசு, கேரட், முள்ளங்கி, அவரை வகைகள் முதலிய பயிர்களைப் பயிரிட்டு பயிர் சுழற்சி செய்யவேண்டும்.
விதைக்கிழங்கை விதைப்பதற்கு முன்பு கார்போபியூரான் கரைசலில் நனைத்து விதைக்கவேண்டும்.
விதைக்கிழங்குகளை விதைப்பதற்கு முன் சுத்தம் செய்யவேண்டும்.
149Potato
Potato tuber moth
உருளைக்கிழங்கு அந்துப்பூச்சி
புதிய கிழங்குகளை நடவு செய்யும் போது நன்கு ஆழமாக நடுதல் வேண்டும். மேலும் தாய் அந்துப்பூச்சிகளை இனக்கவர்ச்சி கொண்டு கவர்ந்து அழிக்கலாம். இலையில் ஏற்படும் சேதாரங்களைத் தடுக்க வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிகிதம் (அ) குயினால்பாஸ் 2 மில்லியினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். நடவுக்கு பயன்படுத்தப்படும் விதைக் கிழங்கினைக குயினால்பாஸ் ஒரு கிலோவினை 100 கிலோ கிழங்கு என்ற அளவில் கலந்து நடவு செய்யவேண
150Tapioca
spiralling white fly
சுருள் வடிவ வெள்ளை ஈ: அலிரோடைகஸ் டிஸ்பர்சஸ்
துத்தி (அபுட்லான் இண்டிகம்) செடிகளை வயலிருந்து அகற்ற வேண்டு்ம். 12 எண்கள்/எக்டர் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை கொண்டு வெள்ளை ஈயை கட்டுப்படுத்தலாம்.
151Tapioca
white fly
வெள்ளை ஈ
12 எண்கள்/எக்டர் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை கொண்டு வெள்ளை ஈயை கட்டுப்படுத்தலாம். பின்வரும் பூச்சிக்கொல்லிகள் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும் ஃபாசலோன் 35 EC @2.5 லிட்டர்/ஹெக்டேர் குவினால்பாஸ் @2.0 லிட்டர்/ஹெக்டேர் ட்ரைஅசோஃபாஸ் @2.0 லிட்டர்/ஹெக்டேர் வேப்ப எண்ணெய் 3%,மெதில் டெமெடோன் 25 EC 2 மிலி /லி
152Tapioca
mite
சிலந்தி பூச்சி
டிக்கோபோல் 18.5 EC 2.5 மிலி/ லி மூன்றாவது மற்றும் ஐந்தாவது மாதத்தில் இலைகள் நன்றாக நனையும்படி தெளிக்கவும்
153Tapioca
mealy bug
மாவு பூச்சி
தையோமீத்தக்சோம் 25 WG-10 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் அல்லது புளோனிகாமைடு 50WG-10 லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் அல்லது ஸ்பைரோடெட்ராமேட் 150OD -1 லிட்டர் தண்ணீருக்கு 1.25 மில்லி லிட்டர் தெளிக்கவும் .இயற்கை முறையில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த அசாடிராக்ட்டின் 1500 பிபிஎம்/ ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மிலி கலந்து தெளிக்கவும்
154Mango
Hopper
தத்துப்பூச்சி
பாசலோன் 35 இசி 1.5 மிலி மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து கிளைகள், தண்டுகள் , மரத்தின் இலைகள் ஆகியவற்றில் நன்கு படும்படி தெளிக்கவேண்டும் அல்லது கார்பரில் 50 சதம் நனையும் தூள் 2 கிராமுடன் 2 கிராம் நனையும் கந்தகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்கவேண்டும்.
155Mango
Leaf galls and Aphids
அசுவினி செதில் பூச்சி
டைமெத்தோயேட் அல்லது மெதைல் டெமட்டான் மருந்துகளில் ஏதாவது ஒன்றை 2 மில்லி ஒரு லிட்டர் நீர் விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்.
156Mango
Antracnose
Fruit rot
Fruit rot
157Mango
Red ant
Red ant
Red ant
158Mango
Nut Weevil
தண்டு துளைப்பான்
தரைமட்டத்திலிருந்து சுமார் 1 மீட்டர் உயரத்தில் மரத்தின் பட்டையை லேசாக செதுக்கி நீக்கிக் கொண்டு, இதன் இடையில் சிறிது நனையும் பஞ்சை வைத்து, மானோகுரோட்டோபாஸ் 10 மில்லி மருந்தை பஞ்சு நனையும் வரை இட்டு பின்பு பட்டையை மரத்தோடு பொருத்தி களிமண் பசையினால் மூடிவிடவேண்டும். கார்போபியூரான் 5 கிராம் குருணை மருந்தினை மரத்தின் தண்டுப்பகுதியில் உள்ள ஓட்டையில் போட்டு களிமண்ணால் மூடிவிடவேண்டும்
159Mango
Fruit fly
பழ ஈ
கோடை உழவு செய்து மண்ணுக்குள் இருக்கும் கூட்டுப் புழுக்களை மண்ணின் மேல் பகுதிக்குக் கொண்டு வருவதால் அவை சூரிய வெளிச்சத்தில் அழிந்துவிடும். மரத்துக்கு அடியில் விழுந்து கிடக்கும் தாக்கப்பட்ட பழங்களைச் சேகரித்து அழிக்கவேண்டும். மெதைல் யூஜனால் ஒரு மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து அதனுடன் மாலத்தியான ஒரு மில்லியைக் கலந்து மொத்த கலவையில் 100 மில்லி எடுத்து ஒரு பாட்டிலில் ஊற்றி ஒரு எக்டருக்கு 25 இடங்களில் வைக்கவேண்டும். இந்த திரவத்தினால் பூச்சிகள் கவரப்படும். பின்பு அவற்றை சேகரித்து அழிக்கவேண்டும்.
160Banana
Lace wing Bug
கண்ணாடி இறக்கைப் பூச்சி
தாக்கப்பட்ட இலைகள், பூக்கள், மற்றும் பழங்களை சேகரித்து அழித்துவிட வேண்டும் மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி (15 / எக்டர்) வைத்து அழிக்கலாம் டைமிதோயேட் 30 இ.சி 850 மி.லி / எக்டர் தெளித்து கட்டுப்படுத்தலாம்
161Banana
Corm weevil
கிழங்கு துளைக்கும் கூன் வண்டு
நடும்போது பூச்சி தாக்காத கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும். தாக்கிய இடங்களில் மீண்டும் வாழையைப் பயிரிடாமல் மாற்றுப்பயிர் செய்ய வேண்டும். ரொபஸ்டா, கர்பூரவள்ளி, மால்போக், சம்பா மற்றும் அடுக்கர் ஆகிய இரகங்களை பயிர் செய்வதை தவிர்க்க வேண்டும். பூச்சி தாக்குதல் குறைவாக காணப்படும் இரகங்களான பூவன், கதலி, குன்னன், பூம்காளி போன்றவற்றை நடலாம். காஸ்மோலியூர் பொறியை எக்டர்க்கு 5 என்ற கணக்கில் வைக்கலாம். தண்டை சிறுசிறு துண்டுகளாக வெட்டி குவியலாகப் போட்டு வைத்து, வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.பெருந்தலை கொண்ட ஊண் உண்ணி எறும்பு இனங்களான (‌பெய்டோல் மகொசெப்பாலா) மற்றும் டெட்ராமோரியம் ஸ்பீசிஸ் என்பவை முட்டைகள், புழுக்கள் போன்றவற்றை உண்ணக் கூடியவை. பிவேரியா பேசியாயனா, மெட்டாரைசியம் அனிசோபிலே போன்ற பூச்சிக் கொ‌ல்லி பூ‌‌‌ஞ்சைகள் இக்கூன் வண்டினை 90 சதவீதம் அழிக்கின்றன. ஸ்டெய்னெர்மா மற்றும் ‌ஹெட்டிரோ ராபிடிஸ் ஸ்பீசிஸ் போ‌ன்ற நூற்புழுக்கள் கூன்‌‌ வண்டு மற்றும் அதன் புழுக்களையும் தாக்குகின்றன. 60-100 கி வேப்பங்கொட்டைப் பொடி அல்லது வேப்பம் ‌புண்ணாக்கினை கிழங்குகளை நடும்போதும் பின்பு 4 மாதங்கள் க‌ழித்து ஒரு முறையும் இடுவதால் பூச்சித் தாக்குதல் குறைவதோடு, நல்ல மகசூல் பெறலாம். 100 கிராமிற்கு அதிகளவோ அல்லது வேப்ப எண்ணெய் இடுவதோ வாழைப் பயி‌ரினையே பாதிக்கக் கூடும். பிரமோன் அல்லது இனக் கவர்ச்சிப் ‌பொறியினை எக்டருக்கு 25 என்ற எண்ணி‌க்கையில் வைக்கலாம். வட்ட வடிவ தண்டுப் பொறியில் தண்டிற்கு பதில் கிழங்கினை வெட்டி வைப்பதால் கூன் வண்டுகள் இவ்வாசனையால் கவரப்பட்டு முட்டையிடவும் உண்ணவும் அப்பகுதிக்கு வரும். இவ்வண்டுகளை சேகரித்து அ‌‌‌ழிக்கலாம். எந்த அளவு பயன்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு பயன்மிக்கது. வாழை நீளத்தண்டு கவர்ச்சிப் பொறியினை எக்டருக்கு 100 என்ற அளவில் பயன்படுத்தலாம்.
162Banana
Stem weevil
தண்டு கூன் வண்டு
அவ்வப்போது காய்ந்த இலைகளை அப்புறப்படுத்தி, நிலத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு மாதமும் பக்க கன்றுகளை நிக்கவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை வே‌ரோடு பிடுங்கி அழித்து விட வேண்டும். அறுவடை முடிந்த பின் தண்டுகளை பிடுங்கி அழித்தபின், கையோடு குலையினை நீக்கி விட்டு, இ‌‌‌‌‌‌‌‌தன் மூலம் அதில் மற்ற வண்டுகள் பெருகுவதை தவி‌ர்க்கலாம். வண்டுகள் அதிகம் காணப்படும் இடங்களில் மட்டாக்கி எனும் அறுவடைக்குப் பின் இலைகளை உரமாக வயலில் இடும் முறையினை தவி‌ர்க்கலாம்.வெட்ட‌ப்பட்ட (நீளவாக்கில்) பகுதியின் மீது 20 கி. பிவேரியா பேசியானா பூஞ்சை அல்லது ‌‌‌‌ஹெப்பிடி‌ரோ ரே‌‌ப்‌டிடிஸ் இன்டிகா எனும் நூற்புழுவினை கொண்டு தடவவேண்டும். இக்கூண்வண்டுகள் நோய் வாய்ப்பட்டு இறந்து விடும். நீளவாக்கில் பிளக்கப்பட்ட தண்டு பொறிக்கப்படு‌ம். இப்‌‌பொறியானது (45 செ,மீ நீளம்) வாழையின் தண்டினை இரண்டாக நீளவா‌க்கில் பிளந்து தயா‌ரிக்கப்படுகிறது. இத்தகைய பொறிகள் வயலில் ஆ‌ங்காங்கு ஏக்கருக்கு 25 என்ற வீதத்தில் வைத்து இக்கூன் வண்டுகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
163Banana
Banana Aphid
அசுவினி
பயிர்செய்யும்போது நிலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூச்சி தாக்குதல் வராமலிருக்க நல்ல கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும். தாக்கப்பட்ட மரத்தை கிழங்கோடு சேர்த்து அழிக்க வேண்டும். வாழை இலை மற்றும் பூவினை 49° செ வெந்நீரில் 10 நிமிடங்கள் வைத்திருந்தால் அசுவினிகள் இறந்துவிடும்.பிரக்கோனிட் குழவிகளான லைசிமெலிபிய‌ஸ் டெஸ்‌டாசெயிபஸ் என்ற ஒட்டுண்ணியை வயலில் விடவும். ‌மேலும் பொறி வண்டுகள், கண்ணாடி இழை இறக்கைப் பூச்சி போன்றவை, அசுவுணிகளை அதிகம் விரும்பி உண்ணக்கூடியவை. பூஞ்சான் வகையைச் சார்ந்த பிவே‌ரியா பேசியானாவையும் வாழை வயலில் விடலாம்.
164Acidlime
Leaf Miner
இலைத்துளைப்பான்
ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கை 20 லிட்டர் தண்ணீரில் ஒரு இரவு ஊறவைத்து வடிகட்டித் தெளித்தால் இலைத்துளைப்பான் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
165Acidlime
Sucking pests
சாறு உறிஞ்சும் பூச்சிகள்
வெள்ளை ஈ: 2 மி.லி குயினால்பாஸ் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். துரு சிலந்தி: ஒரு லிட்டர் நீருக்கு 2.5 மி.லி டைக்கோபால் அல்லது நனையும் கந்தம் 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவும்.
166Acidlime
Shoot borer
தண்டுத் துளைப்பான்
புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்கள் உள்ள கிளைகளை அகற்றிவிடவேண்டும்.
167Acidlime
Fruit sucking moth
பழத்தை உறிஞ்சும் பூச்சி
இதனைக் கட்டுப்படுத்த களைச்செடிகளை அப்புறப்படுத்தி சுத்தாமாக வைத்திருக்கவேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி மாலத்தியான் என்ற விகிதத்தில் கலந்து அதனுடன் கரும்பு ஆலைக்கழிவையும் கலந்து தோட்டத்தில் பல இடங்களில் வைத்து அந்திப் பூச்சிகளைக் கவர்ந்து விரட்டலாம். விளக்குப் பொறிகளை வைத்து அந்திப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
168Papaya
Nematodes
நூற்புழு
நாற்றாங்காலில் நூற்புழு தாக்குதலைத் தடுக்க ஒரு பாலித்தீன் பையில் ஒரு கிராம் கார்போபியூரான் 3 ஜி குருணை மருந்தை இடவேண்டும்.
169Sapota
Bud worm
மொட்டுப்புழு
பாசலோன் 35 ஈசி 2 மிலி / லிட்டர் (அ) / (அ) 5 சதவிகிதம் வேப்பங்கொட்டை சாறு தெளித்து கட்டுப்படுத்தலாம்.
170Sapota
Leaf webber
பிணைக்கும் புழு
பாசலோன் 35 ஈசி 2 மிலி / லிட்டர் தெளிக்கவும்.
171Sapota
Hairy caterpillars
கம்பளிப்புழு
குளோரிபைரியாஸ் 20 ஈசி (அ) பாசலோன் 35 ஈசி 2 மிலி / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
172Guava
Magnesium Deficiency
கொய்யாவில் வெளிமச்சத்து பற்றாக்குறை
மெக்னீசியம் சல்பேட் 2% இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்
173Guava
Tea mosquito bug
தேயிலைக் கொசு
மாலத்தியான ஒரு மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். வேம்பு எண்ணெயை 3 சதம் அடர்த்தியில் தெளிப்பதனால் பூச்சிகள் வராமல் தடுக்கலாம். இவ்வாறு மருந்து தெளிக்கப்பட்ட மரங்களிலிருந்து கனிகளை உடனே அறுவடை செய்வதைத் தவிர்க்கவேண்டும்.
174Guava
Aphids
அசுவினி
டைமித்தோயேட் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
175Guava
Fruit fly
பழ ஈ
மாலத்தியான் 50 ஈசி மருந்துகளில் ஏதேனும் இடைவெளியில் நான்கு முறை தெளிக்கவேண்டும்.
176Coconut(Tall)
Leaf spot disease
இலைபுள்ளி நோய்
டைத்தேனே எம் 45 மருந்தினை@ 0.2 % என்ற அளவில் தெளிக்கவும்
177Coconut(Tall)
Leaf spot disease
இலை புள்ளி நோய்
டைத்தேனே எம் 45 மருந்தினை@ 0.2 % என்ற அளவில் தெளிக்கவும்
178Coconut(Tall)
Rugose Spiraling White fly
ரூ கோஸ் வெள்ளை ஈ
மஞ்சள் ஒட்டு பொறிகளை ஏக்கருக்கு 5 வீதம் அமைத்தல்  கிரைசோபெர்லா இரை விழுங்கிகனை ஏக்கருக்கு 400 வீதம் விடுதல்  என்கார்சியா முட்டை ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 200 வீதம் விடுதல்  அசாடிராக்டின் 1 சதம் மருந்தினை 1 லிட்டர் நீரில் 2 மி.லி கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
179Coconut(Tall)
tanjore wilt
அடித்தண்டு அழுகல் நோய்
சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் (பிஎஃப் -1) ஐ மரத்திற்கு 200 கி வீதம், 200 கி டிரைகோடெர்மா விரிடி உடனஉடன் சேர்த்து இடலாம். 200 கி பாஸ்போபாக்டா், 200 கி அசோட்டோபாக்டர் ஐ 50 கி.கி தொழு உரத்துடன் கலந்து இடலாம்.. தண்டின் சாறு கசியும் பகுதிகளை செதுக்கி டிரைடிமார்ஃப் 5% கொண்டு பாதுகாக்கலாம். ஆரியோபங்கின் 2 கி + காப்பர் சல்பேட் 1 கி + 100 மில்லி தண்ணீரில் கலந்து அல்லது 2 மில்லி டிரைடிமார்ஃப் + 100 மில்லி தண்ணீர் அல்லது 1 மில்லி ஹெக்சகோனசோல் + 100 மில்லி தண்ணீர் கலந்து வேர் மூலம் செலுத்தலாம் .
180Coconut(Tall)
ERIOPHID MITE
ஈரீயோஃபைட் சிலந்தி
சுற்று 1: அஸாடிராக்டின் 1% (5 மி.லி / 1லி நீரில் கலந்தது).சுற்று 2: வேப்பஎண்ணெய் + டீப்பால் (30 மி.லி/1 லி நீரில் கலந்தது). ேலும் டிரையஸோஃபாஸ் 40 EC 5 மி.லி/லி (அ) மோனோகுரோட்டோஃபாஸ் 36 WSC 2 மி.லி/லி (அ) கார்போசல்ஃபான் 25 EC. 2 மி.லி/லி ஏதேனும் ஒரு மருந்தை வேம்பு அஸல் 1% அதாவது 5 மி.லி/லி உடன் கலந்து வேருக்கு அருகே மண்ணில் இடவும்.வேப்பம் புண்ணாக்கு 5 கி.கி / மரம் ஒன்றிற்கு / ஓராண்டிற்கு.
181Coconut(Tall)
Rhinoceros beetle
காண்டாமிருக வண்டு
வண்டின் தாக்குதல் அதிகரிக்கும் போது, கம்பி அல்லது சுளுக்கியால் அதைக் குத்தி வெளியில் எடுத்துக் கொன்று விட வேண்டும். நடுக்குருத்துப்பாகத்தில் (கொண்டை) ன்று மட்டை இடுக்குகளில் கீழ்க்கண்டஏதேனும் ஒரு மருந்திடுவதன் மூலம் அவ்வண்டின் தாக்கத்தை தடுக்கலாம். மணல் + வேப்பம் புண்ணாக்கு கலந்த கலவை 1 :1 என்ற விகிதத்தில் குருத்துகளில் இடுதல் .,ஆண்டிற்கு 3 முறை இடவும். ஆ) 10-5கி அளவுள்ள அந்து உருண்டையை மணலால் மூடவும். இதனை 45 நாட்களுக்கு ஒரு முறை இளம் மட்டை இடுக்குகளில் வைக்கவும். ரினோலியூர் எனும் இனக்கவர்ச்சிப் பொறியினை ஹெக்டருக்கு 5 என்ற வீதத்தில் வைக்கலாம்.
182Coconut(Tall)
Red palm weevil
சிவப்புக் கூண் வண்டு
பாதிக்கப்பட்ட மரங்களில் இருக்கும் துளைகளை கவனித்து மேலே இருக்கும் துளையைத் தவிர பிறவற்றை அடைத்துவிட வேண்டும். பின்பு இத்துளை வழியே புனல் மூலம் 1% கார்போரைல் (20கி/லி) (அ) 0.2% டிரைகுளோர்பான் மரம் ஒன்றுக்கு 1 லி வீதம் ஊற்றிவிட்டுத் துளையை அடைத்து விட வேண்டும். தேவைப்படின் 1 வாரம் கழித்து மீண்டும் ஒருமுறை செய்யவும்.இனக்கவர்ச்சி பொறியை எக்டருக்கு ஒரு பொறி என்ற அளவில் அமைக்கவும்.
183Coconut(Tall)
bag worm
பைப் புழு
தென்னைகளை நன்கு கவனித்து, வளராத இளம் புழுக்கள் இருப்பின் அவற்றை சேகரித்து அழித்து விட வேண்டும். கார்பரைல் 50 WP மருந்தினை 2 கி/லி அளவில் கலந்து தெளிக்கலாம். டைக்குளோர்வாஸ் 76 WSC மருந்தினை 2 மி.லி/லி தெளிப்பதன் மூலமும் இதனைக் கட்டுப்படுத்தலாம். விளக்குப் பொறி வைத்து அந்துப் பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம். ஒரு ஹெக்டருக்கு 5 பொறிகள் தேவைப்படும்.